சிறைத்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘சிறையில் வழங்கப்படும் வசதிகள் தொடர்பாக சிறை அதிகாரிகளிடம் தர்ஷன் அடிக்கடி வாக்குவாதம் செய்கிறார். பிடிவாதமான அணுகுமுறையை கையாள்கிறார். அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது’ என்று கூறினர். கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா மற்றும் 15 பேரின் நீதிமன்ற காவலை வரும் 17ம் தேதி வரை நீதிமன்றம் நீட்டித்துள்ளது. சிறைக்குள் தர்ஷன் உள்ளிட்டோர் பிரச்னை செய்வதால் அவர்களுக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
The post சிறைக்குள் கூடுதல் வசதிகள் கேட்டு சிறை அதிகாரிகளிடம் நடிகர் தர்ஷன் மோதல்? ஜாமீன் கிடைப்பதில் மீண்டும் சிக்கல் appeared first on Dinakaran.