அதன்படி, மூளைச்சாவு அடைந்த நபர்களின் உறவினர்கள், உடல் உறுப்பு தானம் அளிக்க ஒப்புதல் அளித்தவுடன், உடல் உறுப்புகள் பெறப்படுகிறது. தொடர்ந்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் உடல் உறுப்பு தானம் செய்தவரின் இல்லத்தில் நடைபெறும் இறுதிச்சடங்கில் அரசு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. முதல்வரின் இந்த அறிவிப்பால் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
குறிப்பாக முதல்வர் அறிவித்த 11 மாதத்தில் மட்டும் மட்டும் இதுவரை 192 பேர், உடல் உறுப்புகள் தானம் செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து சிறுநீரகம், நுரையீரல், இதயம், கல்லீரல், கார்னியா என மொத்தம் 1086 உடல் உறுப்புகள் பெறப்பட்டுள்ளன. இது கடந்த 6 ஆண்டுகளை ஒப்பிடுகையில் சாதனை ஆகும். 2023ம் ஆண்டு 178 நபர்களும், 2022ம் ஆண்டு 156 நபர்களும், 2021ம் ஆண்டு 60 நபர்களும், 2020ம் ஆண்டு 55, 2019ம் ஆண்டு 127 நபர்களும் நபர்களும் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர். மேலும் இந்த ஆண்டு உடல் உறுப்பு அளிப்பதாக 6775 நபர்கள் உறுதி அளித்துள்ளனர்.
* இறந்தவர் உடலுக்கு அரசு மரியாதை அறிவிப்புக்கு பிறகு கிடைத்த உடல் உறுப்பு எண்ணிக்கை விவரம்
மருத்துவமனை – உறுப்புகள்
ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை 42
ராஜாஜி அரசு மருத்துவமனை 38
மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனை 21
கோயம்புத்தூர் அரசு மருத்துவமனை 20
The post தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் அதிகரிப்பு கடந்த 8 மாதங்களில் 1,086 உடல் உறுப்புகள் தானம் appeared first on Dinakaran.