சம்பா: இமாச்சல் மாநிலம் சம்பா மாவட்டம் பார்மூரை சேர்ந்த ஓஷின் ஷர்மா என்பவர், இமாச்சல் மாநில நிர்வாக சேவை துறையின் தாசில்தார் அந்தஸ்திலான அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2021ம் ஆண்டு தர்மசாலாவைச் சேர்ந்த அப்போதைய பாஜக எம்எல்ஏவான விஷால் நெஹாரியனை மணந்தார். ஆனால் அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டதால் இருவரும் பிரிந்தனர். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்ற ஓஷின் ஷர்மா, சமூக ஊடகங்களில் அவ்வப்போது வீடியோ வெளியிட்டு வந்தார். விதவிதமான கெட்பில் ஆடைகளை அணிந்து கொண்டு ரீல்ஸ் வீடியோ வெளியிடும் இவரை, லட்சக்கணக்கான மக்கள் பின்தொடர்கின்றனர்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஓஷின் ஷர்மாவுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் நோட்டீஸ் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்காமல் இருப்பதாகவும், அதனால் அரசுப்பணிகள் தாமதப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவரை சந்தோல் தாசில்தார் பணியில் இருந்து இடமாற்றம் செய்தும் உத்தரவிட்டுள்ளார். ஆனால் அவருக்கு இதுவரை புதிய பதவி ஏதும் வழங்கப்படவில்லை. அதனால் அவர் என்ன செய்வதென்றே தடுமாறி வருகிறார்.
The post அரசுப் பணியை ஒழுங்காக செய்யாமல் பலவித ‘கெட்டப்பில்’ ரீல்ஸ் வெளியிட்ட பெண் தாசில்தார் appeared first on Dinakaran.