கிரகங்களே தெய்வங்களாக

கிரகங்கள்தான் தெய்வங்களிடம் அருளினை பெற்று நமக்கு அருள்பாலிக்கின்றன. அக்கிரகங்களே தெய்வங்களின் கட்டுக்குள்தான் இருக்கின்றன. சில நேரங்களில் கிரகங்களின் அடைவுகள் யாவும் தெய்வங்களின் அருளை பெறாமல் செய்வதற்கும் தெய்வங்களே கிரகங்களின் வடிவில் தங்களை மறைத்து கொள்கின்றன என்பதே பேரூண்மை. உங்களுக்கான தேவதை எங்கு உள்ளது என்பதை வழிகாட்டுவதே ஜோதிடம் என்ற ஒளி விளக்காகும்.வேலூர் கோட்டையினுள் அருள் பாலிக்கும்  ஜலகண்டேஸ்வரர் கோயிலை காண்போம். இக்கோயிலின் சிறிய வரலாறு. முன்பு ஒரு காலத்தில் வேலூருக்கு அழகில்லாத பெண்களும் சிலை இல்லாத கோயிலும் என்ற பெயர் உண்டு. அந்த பெயர் 1981ஆம் ஆண்டுதான் மாறியது. வேலூருக்கு அருகில் சத்துவாச் சாரியில் ஜலகண்ட விநாயகர் கோயில் அருகே கண்டெடுக்கப்பட்டசிவலிங்கம்தான் இப்பொழுது வேலூர் கோட்டை முலவராக அருள்பாலிக்கிறார். 1982ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்து வழிபாட்டுத் தலமாக மாறியது. இதுவே வரலாறு.

உலகியல் ஜோதிடத்தில் தமிழ் நாட்டை எடுத்துக் கொள்ளும் போது மேஷ ராசிமண்டலம் வேலூர், திருவண்ணா மலை, வட ஆற்காடு மாவட்டத்தின் மேற்குப் பகுதிகளை குறிக்கிறது. மேஷத்தின் அதிபதி செவ்வாய். ஜல கண்டேஸ்வரரை கிரகமாக பார்க்கும் பொழுது, ஜலம் என்பது நீரான சந்திரன். சூரியன் என்பது ஈஸ்வராக வருகிறார்.  என்பது பெரிய என்று எடுத்துக் கொள்ளலாம். இதில் கடவுளானவர் கிரகமா வேலூரில் அருள்பாலிக்கிறார்.எப்படி தெய்வங்களுக்கு கிரகங்கள் கொடுக்கிறது…ஒவ்வொரு கோயிலிலும் தெய்வங்களை நிர்மாணம் செய்யும் பொழுது அந்த தெய்வங்களுக்கு கிரகங்கள்தான் பெயர்களை கொடுக்கிறது. எப்படி கொடுக்கிறது எனில், இந்த பூமி பிரபஞ்ச ஆற்றலாலும் கிரகங்களில் கதீர்வீச்சுகளாலும் சூழப்பட்டுள்ளது. எவ்விடத்தில் எந்த கிரகங்களின் ஆற்றல் அதிகமாக உள்ளதோ அந்த கிரகமே அந்த தெய்வத்திற்கு பெயரை சூட்டுகிறது என்பது நிதர்சன மான உண்மை.

ஜோதிடத்தில் மேஷத்தின் அதிபதி செவ்வாய் வீரமாகவும் காவலாகவும் ரத்தமாகவும் மருந்தாகவும் காரகமாக வருகிறார். முதன் முதலில் சிப்பாய் கலகம் வேலூரில்தான் தொடங்கியது. இதுவே வீரத்திற்கு காவலுக்கும் அடையாள மாகும். ஆகவே, மேஷ லக்னக்காரர் களுக்கு பரிகார ஸ்தலமாக உள்ளது.யாருக்கு மேஷத்தில் சூரியனுடன் சந்திரனும் ராகு- கேது நிற்கிறதோ கிரகண தோஷமாக மாறுகிறது. அவர்கள் சர்ப்ப சாந்தி பூஜை செய்தால் தோஷம் விலகும் அல்லது கிரகண வேளையில் இங்கு வந்து 48 நிமிடங்கள் அமைதியாக கடவுளை தியானித்தாலே கிரகண தோஷங்கள் விலகி தொழில் முன்னேற்றம், திருமண சுபநிகழ்வுகள் கைகூடும், சொத்து தொடர்பான பிரச்னைகள் தீரும், காதல் கைகூடும், அது போலவே, மேஷத்தில் சூரியன் – செவ்வாய் இருப்பவர்கள் மருத்துவத்திலோ, ராணுவத்திலோ காவல்துறையில் இருப்பவர்களுக்கு வாழ்வில் சில தடைகள் உண்டு அவர்கள் இக் கோயிலில் வந்து வழிபட்டால் 48 நிமிடம் வழிபட்டால் தடைகள் நீங்கி அணுகூலம் ஏற்படும்.இவையனைத்தும் பொதுப் பலன்களே ஒவ்வொருவரின் தனிப்பட்ட ஜாதகம்தான் அவரவருக்கு வழிகாட்டும் என்பது நிதர்சனம்.

 

The post கிரகங்களே தெய்வங்களாக appeared first on Dinakaran.

Related Stories: