ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி; சீனாவில் இன்று தொடக்கம்

ஹூலுன்பியர்: நடப்பு சாம்பியன் இந்தியா உட்பட 6 நாடுகள் பங்கேற்கும் 8வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி சீனாவில் இன்று தொடங்கிறது. ஆசிய தரவரிசையில் முதல் 6 இடங்களில் உள்ள அணிகள் பங்கேற்கும் இத்தொடர் 2011ல் தொடங்கியது. இதுவரை நடந்த 7 கோப்பைகளில் 4 முறை இந்தியா கோப்பையை வென்றுள்ளது. லீக் சுற்று செப்.14ல் முடிகிறது. முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் செப்.16ல் அரையிறுதியில் மோதும். பைனல் செப்.17ம் தேதி நடக்கும். பங்கேற்கும் அணிகள்: இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, கொரியா, ஜப்பான், சீனா.

* இந்தியா, பாகிஸ்தான் தலா 5 முறை பைனலில் விளையாடி உள்ளன.
* இந்தியா, மலேசியா தலா 6 முறை அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.
* பாகிஸ்தான் 2 முறை, தென் கொரியா ஒரு முறை சாம்பியனாகி உள்ளன.
* இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் கடந்த ஆண்டு நடந்த தொடரின் பைனலில் இந்தியா 4-3 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி சாம்பியனானது.

* பெங்களூருவில் இந்தியா ஏ அணியுடன் நடக்கும் துலீப் டிராபி போட்டியில் இந்தியா பி அணி 2வது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 150 ரன் எடுத்துள்ளது (சர்பராஸ் 46, பன்ட் 61, நிதிஷ் குமார் 19). முன்னதாக, முதல் இன்னிங்சில் இந்தியா பி 321 ரன், இந்தியா ஏ 231 ரன்னில் ஆட்டமிழந்தன. இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.
* இங்கிலாந்து ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் நட்சத்திர வீரர் ஆண்ட்ரூ பிளின்டாப் (46 வயது) நியமிக்கப்பட்டுள்ளார்.
* இலங்கையுடனான 3வது டெஸ்டில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 325 ரன் குவித்து ஆல் அவுட்டானது.

The post ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி; சீனாவில் இன்று தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: