டெல்லி: டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் பாத யாத்திரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணமாக பாத யாத்திரையை ஒத்திவைக்கும்படி போலீஸ் கேட்டுக் கொண்டதால் ஒத்திவைக்கப்பட்டது. ஆக.16ஆம் தேதி கிரேட்டர் கைலாஷ் பகுதியில் பாத யாத்திரை தொடங்கும் என ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.