சென்னை: நாளை மறுநாள் நடைபெற இருந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகி இருந்தது. ஆக.9-ல் அதிமுக தலைமைக்கழகச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், வருகின்ற 9.8.2024 – வெள்ளிக் கிழமையன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது என்பதைத் தெரிவித்துக்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்த்த நிலையில் கூட்டம் ஒத்திவைப்பால் அதிமுக தொண்டர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
The post அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திடீர் ஒத்திவைப்பு: தொண்டர்கள் குழப்பம் appeared first on Dinakaran.