சென்னை: புரசைவாக்கத்தில் ரூ.45 கோடி மோசடி செய்ததாக சந்ததா சங்க நிதி லிமிடெட் நிறுவன இயக்குநர்கள் 2 பேரை ெபாருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். புரசைவாக்கம், வெள்ளாளர் தெருவில் இயங்கி வந்த புரசைவாக்கம் சந்ததா சங்க நிதி லிமிடெட் நிறுவனமானது. பொதுமக்களிடமிருந்து முதலீடுகளை பெற்று முடிந்த பிறகும் முதலீடுகளை திருப்பித் தரவில்லை என புகார்கள் சென்னை பொருளாதார குற்றப்பிரிவில் பெறப்பட்டது. அதன்பேரில், நிதி நிறுவனம் மீதும் அதன் இயக்குநர்கள் மோகன், சுப்பிரமணியன், வெங்கடராமன் ஆகியோர் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டது.
இதுவரையில் 564 புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் மேற்கண்ட நிறுவனம் ரூ.45 கோடி அளவில் முதலீடுகளை பெற்று திரும்ப தராமல் ஏமாற்றியதாக தெரிகிறது. உரிய விசாரணைக்கு பிறகு காவல் துணை கண்காணிப்பாளர் டில்லிபாபு தலைமையிலான பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், நிதி நிறுவனத்தின் இயக்குநர்கள் மோகன் மற்றும் சுப்பிரமணியனை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
The post புரசைவாக்கத்தில் சந்ததா சங்க நிதி நிறுவனம் ரூ.45 கோடி நூதன மோசடி: இயக்குநர்கள் 2 பேர் கைது appeared first on Dinakaran.