வினை விதைத்தவன் வினை அறுப்பான்

பிராரப்த கர்மா (பகுதி – 2) நான் பாக்கியசாலி ஆகிறேன்

உடலாலும் மனதாலும் நான் சந்தோஷமாக இருக்கிறேன். நான் செய்த பாக்கியமே நான் இந்த பதிப்பை வாசிக்கிறேன். இதை என் உடலும் புரிந்து கொள்கிறது. மனதும் புரிந்து கொள்கிறது. என்னுடைய உடலுக்கும், என்னுடைய மனதிற்கும் நன்றி. அட்சய லக்னம் என்பது உடல் சார்ந்த விஷயங்கள். அட்சய ராசி என்பது மனம் சார்ந்த விஷயங்கள்.

அட்சய ராசியும் மனமும்

அட்சய ராசி முழுவதும் நமது மனம் எண்ண ஓட்டங்களைப் பொறுத்தே வேலை செய்கிறது. சந்திரன் யார் மூலமாக என்னென்ன கொடுக்க வேண்டும் என்பதை கிரகங்கள் வழியே கொடுக்கிறது. இதை நல்ல வழியிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். தீயவழியிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். எண்ணங்களே வாழ்க்கை என ஒரு வார்த்தையில் கூறிய ஒரு விஷயம் உங்கள் வாழ்க்கை முறையை புரட்டிப்போடும். சொல்வதற்கும் செய்வதற்கும் வெவ்வேறு விதமான செயல்கள் நடைபெறுவதால், இதை அனுபவித்தே தீர வேண்டும். வினை விதைத்தவன் வினை அறுப்பான். தினை விதைத்தவன் தினை அறுப்பான் என்று சொல்வதைப் போல, நம் கையில் இருக்கும் விதையை எந்த இடத்தில் விதைக்கப் போகிறோம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். எந்த இடம் என்பது உடலைக் குறிக்கிறது, நல்ல எண்ணங்கள், நல்ல உடல் தன்மையை உருவாக்கும். தீய எண்ணங்கள் உடலை பாதிக்கும். எல்லாம் எழுதப்பட்டது என்றால் இந்த பிரார்த்தகர்மா எதற்கு? இருப்பதை வைத்துக் கொண்டு சந்தோஷமாக மகிழ்ச்சியாக வாழ்ந்தால், உடலும் மனமும் சரிவர ஒரே பாதையில் இயங்குகிறது அல்லது வழி கொடுக்கிறது, அட்சய லக்னம் நன்றாக அமைந்து, அட்சய ராசியும் நன்றாக அமைந்தால், ஒருவருடைய வாழ்க்கை சரியான பாதையில் செல்கிறது என்று பொருள். யாருக்கும் தீங்கு விளைவிக்காத உடலும், யாருக்கும் தீங்கு நினைக்காத மனமும் இருந்தால் அவரது பிராப்தம் அதுவாகவே செயல்பட ஆரம்பிக்கும். அதற்கு தூண்டுகோல் தேவை இல்லை.

அட்சய ராசி வாழ்வில் புதிய வெளிச்சம்

இருளை நீக்க ஒளி தேவை, வாழ்வின் இருளை நீக்க ஜோதிடம் என்ற ஒளி தேவை.
Light is needed to illuminate darkness, Astrology is the light needed to illuminate the darkness in our life.

தொகுப்பு: வாக்கு யோகி

The post வினை விதைத்தவன் வினை அறுப்பான் appeared first on Dinakaran.

Related Stories: