எஸ்ஏ. கலை, அறிவியல் கல்லூரி சார்பில் ஆட்டிசம், செல்பேசி தவிர்த்தல் விழிப்புணர்வு நடைப்பயிற்சி

திருவள்ளூர்: சென்னை அடுத்த திருவேற்காடு எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் ப.வெங்கடேஷ் ராஜா உத்தரவின்படி, கல்லூரியின் உளவியல் துறை, நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் அரண் பவுண்டேஷன் இணைந்து சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில், ஆட்டிசம் மற்றும் செல்பேசி பயன்பாட்டை தவிர்த்தல் குறித்த விழிப்புணர்வு நடைப்பயிற்சியை நடத்தியது. இதற்கு கல்லூரி இயக்குனர் சாய் சத்தியவதி, கல்லூரி முதல்வர் முனைவர் மாலதி செல்வகுமார் தலைமை வகித்தனர்.

எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உளவியல் துறை மாணவர்களும்கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களும் கலந்துகொண்டு ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வை பெற்றனர். மேலும் ஆரம்பத்திலேயே ஆட்டிசம் குறைபாட்டைக் கண்டுபிடித்தால் அதைச் சரி செய்து விடலாம் என்கிற எண்ணத்தையும் மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் குழந்தைகளிடம் அரவணைப்பும் அன்பும் காட்டுவது குறித்தும் விளக்கம் பெற்றனர். நடைப்பயிற்சியில் கலந்து கொண்ட பலரிடமும் ஆட்டிசம் குறித்த தகவல்களை அளித்தனர்.

 

The post எஸ்ஏ. கலை, அறிவியல் கல்லூரி சார்பில் ஆட்டிசம், செல்பேசி தவிர்த்தல் விழிப்புணர்வு நடைப்பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: