வயலூர் கிராமத்தில் 1000 ஆண்டு பழமையான அம்மன் கோயில்களில் மகா கும்பாபிஷேகம்

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம், வயலூர் கிராமத்தில் உள்ள 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த  சேமாத்தம்மன், மந்தவெளி அம்மன் மற்றும் விக்ன விநாயகர் உள்பட 5 கோயில்களிலும் ஒரே நேரத்தில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு, சேமாத்தம்மன் கோயில் அருகில் 33 குண்டங்கள் கொண்ட யாகசாலை அமைக்கப்பட்டு மகா கணபதி ஹோமத்துடன் பூஜைகள் தொடங்கியது. பிறகு லட்சுமி பூஜை கோமாதா பூஜை, மகா கணபதி ஹோமம் மகாலட்சுமி ஓமாம் நவகிரக ஓமம் பூர்ணஹூதி நைவேத்தியம் ஆராதனை நடைபெற்றது.

நேற்று காலை 6 கால யாக பூஜையும் பிறகு 9.30 மணியளவில் யாகசாலையில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டு கோபுர விமான கலசத்தின் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு 5 கோயில்களிலும் ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோயில் கோபுரத்தின் மீது உள்ள கலசத்தின் மீது புனித நீரால் அபிஷேகம் செய்யும் முன்பாக வானத்தில் 5 கருடன்கள் வட்டமிட்டு ஆசீர்வதித்தது கண்டு பக்தர்கள் பரவசமடைந்து ‘’கோவிந்தா, கோவிந்தா’’ என முழக்கமிட்டனர். விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

 

The post வயலூர் கிராமத்தில் 1000 ஆண்டு பழமையான அம்மன் கோயில்களில் மகா கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Related Stories: