தேவை அதிகரிப்பதால் தோழி விடுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்

சென்னை: அதிகரிக்கும் தேவையால், சமூக நலத்துறையின் கீழ் இயங்கி வரும் பழைய மகளிர் விடுதிகளை கையகப்படுத்தி, மறுசீரமைப்பு செய்து ‘தோழி’ விடுதிகளாக மாற்ற, தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் (TNWWHC) முடிவு செய்துள்ளது. மதுரை, திருப்பூர், தூத்துக்குடி, திருவள்ளூர், புதுக்கோட்டை, கோவை ஆகிய இடங்களில் உள்ள பழைய விடுதிகள் ரூ.1 கோடி மதிப்பில் சீரமைக்கப்பட்டு பல வசதிகளுடன் ‘தோழி’ விடுதிகளாக்கப்பட உள்ளன.

பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வேலைக்காகவும், உத்தியோகபூர்வ வருகைக்காகவும் செல்லும் பணிபுரியும் பெண்களின் தங்குமிடத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான சிறப்பு முயற்சியாக ”தோழி பெண்கள் தங்கும் விடுதி” தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டுள்ளது.

இவ்விடுதிகள் சென்னை, செங்கல்பட்டு, பெரம்பலூர், சேலம், திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் 11 மகளிர் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன.

சாப்பாட்டு அறை, ஓய்வு அறை, க்ரீச், வைஃபை, ஏர் கண்டிஷனர்கள், லிஃப்ட் வசதி, வாஷிங் மெஷின், அயர்ன் போர்டு, அயர்ன் பாக்ஸ், குளிர்சாதனப் பெட்டியுடன் கூடிய சரக்கறை, மைக்ரோவேவ், வாட்டர் கூலருடன் கூடிய ஆர்ஓ வாட்டர் போன்றவை உள்ளன. அதோடுகூட சிசிடிவி கேமராக்கள் என்று பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 24 மணி நேரம் கண்காணிப்பும் உள்ளது.

இந்த விடுதிகளில் அறையை புக் செய்ய நேரில் வரவேண்டும் என்பதில்லை. https://www.tnwwhcl.in/ இணைய தளத்தின் மூலமாக ஆன்லைன் புக்கிங் செய்துகொள்ளலாம். சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள்’ என்ற நிறுவனத்தின் சார்பில், சென்னையில் மட்டும் 16 கோடியே 49 லட்சம் ரூபாய் செலவில் இந்த விடுதிகளை அரசு கட்டித் தந்துள்ளது.

தற்போது அதிகரிக்கும் தேவையால், சமூக நலத்துறையின் கீழ் இயங்கி வரும் பழைய மகளிர் விடுதிகளை கையகப்படுத்தி, மறுசீரமைப்பு செய்து ‘தோழி’ விடுதிகளாக மாற்ற தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

 

The post தேவை அதிகரிப்பதால் தோழி விடுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் appeared first on Dinakaran.

Related Stories: