இபிஎப்ஓ பி.ஏ., இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி எழுத்து தேர்வு

வேலூர், ஜூலை 8: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் வேலூரில் நேற்று 7 மையங்களில் நடந்த இபிஎப்ஓ பி.ஏ., மற்றும் இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர்களுக்கான எழுத்துத்தேர்வை வேலூரில் 1,313 பேர் எழுதினர். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன அலுவலகங்களில் தனி உதவியாளர் மற்றும் தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனைகளில் 1,930 நர்சிங் அலுவலர் காலி பணியிடங்களை நிரப்புவதற்காக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நேற்று நாடு முழுவதும் எழுத்துத்தேர்வு நடந்தது. இதற்கான விண்ணப்பங்கள் கடந்த மார்ச் 7ம் தேதி முதல் பெறப்பட்டது. மார்ச் 27ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. எழுத்துத்தேர்வு ஜூலை 7ம் தேதி(நேற்று) காலை, மதியம் என இரண்டு வேளைகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. காலையில் 9.30 மணி முதல் 12.30 மணி வரை இபிஎப்ஓ பர்சனல் அசிஸ்டென்ட் பணியிடத்துக்கான எழுத்துத்தேர்வும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர் பணியிடத்துக்கான எழுத்துத்தேர்வும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இத்தேர்வு தமிழ்நாட்டில் சென்னை, வேலூர், கோவை, சேலம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, வேலூரில் கொசப்பேட்டை ஈவெரா அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, அரசு முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, ஊரீசு மேல்நிலைப்பள்ளி, தோட்டப்பாளையம் அரசு கோடையிடி குப்புசாமி மேல்நிலைப்பள்ளி, ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, எத்திராஜ் மெட்ரிக் பள்ளி, காட்பாடி டான்போஸ்கோ மேல்நிலைப்பள்ளி என 7 மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது. இதில், காலையில் இபிஎப்ஓ பர்சனல்அசிஸ்டென்ட் பணியிடத்துக்காக நடந்த எழுத்துத்தேர்வு வேலூர் அரசு கோடையிடி குப்புசாமி மேல்நிலைப்பள்ளி மையத்தில் நடந்த தேர்வுக்கு 285 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டதில் 67 பேர் மட்டுமே எழுதினர். 218 பேர் ஆப்சென்டாகினர். மதியம் 2 மணி முதல் 4 மணி வரை 7 மையங்களில் நடந்த இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர் பணியிடத்துக்கான எழுத்துத்தேர்வை அழைப்பு அனுப்பப்பட்ட 1,757 பேரில் 285 பேர் ஆப்சென்டாகினர். 2,042 பேர் தேர்வு எழுதினர்.

தேர்வு மையங்களில் தேர்வு துவங்கும் நேரத்துக்கு 15 நிமிடம் முன்னதாக வந்தவர்கள் மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். மையத்திற்குள் செல்போன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. அதேநேரத்தில் தேர்வர்களுக்கான குடிநீர் வசதி உட்பட அடிப்படை வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.ரேஷன் பொருட்களின் எடையை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்

The post இபிஎப்ஓ பி.ஏ., இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி எழுத்து தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: