விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பணிகளில் ஈடுபடும் காவலர்களுக்கான அஞ்சல் வாக்குபதிவு!

விக்கிரவாண்டி: கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணிகளில் ஈடுபடும் காவலர்களுக்கான அஞ்சல் வாக்குப்பதிவு பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான பழனி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தன் பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: க்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 10ம்தேதி நடக்கிறது. அதனடிப்படையில் தொகுதியில் 276 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 44 பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறிப்பட்டுள்ளது. எனவே, அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், வாக்குப்பதிவு நாளன்று விழுப்புரம் மாவட்டம் மற்றும் அருகிலுள்ள மாவட்ட காவல்துறை காவலர்கள் மற்றும் மத்திய துணைபாதுகாப்பு படையினர் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர்.

85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களிடம் அஞ்சல் வாக்கு சேகரிக்கும் பணிகள் நிறைவுபெற்றுள்ளது. விக்கிரவாண்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில், காவலர்களுக்கான அஞ்சல் வாக்குப்பதிவு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் உள்ள 370 காவலர்கள் தங்கள் வாக்கினை அஞ்சல் வாக்குகளாக செலுத்த உள்ளனர். இப்பணியானது தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணிகள் இரண்டு நாட்களில் முடிக்கப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்றார்.

 

The post விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பணிகளில் ஈடுபடும் காவலர்களுக்கான அஞ்சல் வாக்குபதிவு! appeared first on Dinakaran.

Related Stories: