இந்தியாவுக்கு பெருமை சேருங்கள்: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களுடன் பிரதமர் மோடி உரையாடல்

டெல்லி: இந்த முறையும் நீங்கள் இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பீர்கள் என்று நான் நம்புகிறேன் என ஒலிம்பிக் செல்லும் இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடியபோது பேசியுள்ளார். 33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை 26-ம் தேதி தொடங்குகிறது. ஆகஸ்ட் 11-ம்தேதி வரை இந்தவிளையாட்டு திருவிழா நடைபெறுகிறது. இதில் இந்தியா சார்பில் 102 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். கொரோனாவால் ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்டு 2021-ம் ஆண்டு டோக்கியோவில் நடந்த கடந்த ஒலிம்பிக்கில் இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என்று 7 பதக்கம் வென்றது. இந்த ஒலிம்பிக்கில் இரட்டை இலக்கத்தில் பதக்கம் வெல்வதை குறிவைத்து இந்திய அணி ஆயத்தமாகி வருகிறது.

இந்த நிலையில், பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடினார். வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது: நீங்கள் ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற மனநிலையில் உள்ளீர்கள். வெற்றி பெற்று திரும்பும் போது உங்களை வரவேற்கும் மனநிலையில் நானும் இருக்கிறேன். விளையாட்டு உலகின் நட்சத்திரங்களான உங்களை சந்திக்கவும். உங்களிடம் இருந்து புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளவும், உங்களின் கடின உழைப்பை புரிந்துகொள்ளவும் முயற்சிக்கிறேன். அதேபோல, நான் எல்லோருடனும் நேரடியாக தொடர்பு கொள்ளவும் முயற்சிக்கிறேன்.

The post இந்தியாவுக்கு பெருமை சேருங்கள்: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களுடன் பிரதமர் மோடி உரையாடல் appeared first on Dinakaran.

Related Stories: