கேரளாவில் நகரசபை அலுவலகத்தில் ஊழியர்களின் ரீல்ஸ் வீடியோ: விளக்கம் கேட்டு நோட்டீஸ்

திருவனந்தபுரம்: பத்தனம்திட்டா அருகே நகரசபை அலுவலகத்தில் ஊழியர்கள் ரீல்ஸ் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நகரசபை செயலாளர் விளக்கம் கேட்டு ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே உள்ள திருவல்லாவில் நகரசபை அலுவலகம் உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் இந்த நகரசபை அலுவலகத்திலுள்ள வருவாய் பிரிவில் பணிபுரியும் பெண்கள் உள்பட 8 ஊழியர்கள் ஒரு மலையாளப் படத்தின் பாடல் காட்சியை வைத்து ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் அந்த வீடியோவை வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் உள்பட சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். சிறிது நேரத்திலேயே இந்த வீடியோ வைரலாக பரவியது.

இது குறித்து அறிந்த திருவல்லா நகரசபை செயலாளர் 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு கூறி ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பணி நேரத்தில் ரீல்ஸ் எடுத்தது, அரசு அலுவலகத்தை தவறாக பயன்படுத்தியது, வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததின் மூலம் பொதுமக்களிடையே நகரசபைக்கு களங்கம் ஏற்படுத்தியது உள்ளிட்ட குற்றங்கள் அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை சிறப்புப் பணிக்காக அலுவலகத்திற்கு வந்தபோது தான் ரீல்ஸ் வீடியோ எடுத்ததாக திருவல்லா நகரசபை ஊழியர்கள் கூறுகின்றனர்.

The post கேரளாவில் நகரசபை அலுவலகத்தில் ஊழியர்களின் ரீல்ஸ் வீடியோ: விளக்கம் கேட்டு நோட்டீஸ் appeared first on Dinakaran.

Related Stories: