கேரளாவில் வங்கி சிடிஎம் இயந்திரத்தில் ரூ.2.24 லட்சம் கள்ளநோட்டுகள்: 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை

திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் சிடிஎம் இயந்திரத்தில் ரூ.2.24 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கேரள மாநிலம் கோட்டயம் அருகே ஈராற்றுபேட்டையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சொந்தமான ஏடிஎம், சிடிஎம் மையம் உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த சிடிஎம் இயந்திரத்தில் போடப்பட்ட பணத்தை வங்கி அதிகாரிகள் பரிசோதித்தனர். அதில் ரூ.500 கள்ளநோட்டுகள் மொத்தம் ரூ.2.24 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து வங்கி அதிகாரிகள், ஈராற்றுபேட்டை போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இதில் கள்ள நோட்டுகளை டெபாசிட் செய்ததாக சந்தேகிக்கப்படும் 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

The post கேரளாவில் வங்கி சிடிஎம் இயந்திரத்தில் ரூ.2.24 லட்சம் கள்ளநோட்டுகள்: 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: