குமரியில் கனமழை காரணமாக உப்பு விலை உயர்வு

குமரி: குமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக உப்பின் விலை ஏற்றம் அடைந்துள்ளது. சுவாமிதோப்பு, கரும்பாட்டூர், ஆண்டிவினை, புத்தளத்தில் 600 ஏக்கர் பரப்பளவில் இருந்த உப்பள பாத்திகள் மழை நீரில் மூழ்கின. குமரியில் பெய்து வந்த கனமழையால் உப்பளத்தொழில் முற்றிலும் நிறுத்தப்பட்டதால் உப்பின் விலை அதிகரித்துள்ளது. 1 டன் ரூ.2,000-க்கு விற்ற உப்பின் விலை இன்று ரூ.3,000-க்கு விற்றபனை செய்யப்பட்டு வருகிறது.

The post குமரியில் கனமழை காரணமாக உப்பு விலை உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: