கொடைக்கானல் பகுதியில் உணவை தேடி ஊருக்குள் புகுந்த கரடி: வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை

திண்டுக்கல்: கொடைக்கானல் பகுதியில் உணவை தேடி ஊருக்குள் புகுந்த கரடி ஒன்று உலவி வரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடைக்கானல் மலைகிராமங்களில் பெரும்பாலான வனப்பகுதிகளில் காட்டு எருமை, மான், பன்றி, சிறுத்தை, யானை, கரடி உள்ளிட்ட விலங்குகள் அதிக அளவில் உலா வருகிறது.

இந்நிலையில் மன்னவனூர் கிராமப்பகுதியில் விவசாய நிலங்களில் புகுந்து காட்டு பன்றிகள் சேதப்படுத்திய நிலையில் தற்போது கரடி ஒன்று உணவு தேடி ஊருக்குள் உலாவரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் வசிக்கும் மக்களை அச்சமடைய செய்துள்ளது. வனத்துறையினர் கரடியை கண்காணித்து வனப்பகுதியில் விரட்ட வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

The post கொடைக்கானல் பகுதியில் உணவை தேடி ஊருக்குள் புகுந்த கரடி: வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: