எதிர்ப்புகள், ஆர்ப்பாட்டம் நடப்பதால் புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து ஒன்றிய அரசு பரிசீலிக்கவேண்டும்: திருமாவளவன்!

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி அளித்த பேட்டி; புதிய குற்றவியல் சட்டத்தை ஒன்றிய அரசு அமல்படுத்தியுள்ளது. இதன்மீது அகில இந்திய அளவில் வழக்கறிஞர்கள், சட்ட வல்லுநர்கள் கடும் விமர்சனத்தை வைத்துள்ளனர். இதுதொடர்பாக சென்னையில் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. எனவே, புதிய குற்றவியல் சட்டம் குறித்து ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். உரிய திருத்தங்களை கொண்டுவரவேண்டும். ஒன்றிய பாஜ அரசின் எதேச்சதிகார போக்கு வழக்கமான ஒன்றுதான்.

தற்போது 200க்கும் மேற்பட்ட இடங்களில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்ற நிலையில், காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளும் வலுவான எதிர்க்கட்சியாக இயங்குவோம். ஆளுங்கட்சிக்கு நெருக்கடி தரும் அளவுக்கு எங்களின் செயல்பாடுகள் அமையும். இலங்கையின் மூத்த தலைவர் இரா.சம்பந்தன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். சிங்களப் படையினரால் 27 ராமேஸ்வர மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை உடனடியாக விடுவிக்க ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

 

The post எதிர்ப்புகள், ஆர்ப்பாட்டம் நடப்பதால் புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து ஒன்றிய அரசு பரிசீலிக்கவேண்டும்: திருமாவளவன்! appeared first on Dinakaran.

Related Stories: