டெல்லி மழை பலி 8 ஆக உயர்வு


புதுடெல்லி : டெல்லியில் தொடரும் மழையால், நகரின் பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் தேங்கியுள்ளது. இந்த மழை பாதிப்பால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் நேற்று முன்தினம் வெளுத்து வாங்கிய மழையால் தலைநகரம் வெள்ளக்காடாக மாறிப்போனது. டெல்லி விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்து கார் ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து வசந்த் விகாரில் கட்டுமான பணியில் சுவர் இடிந்து 3 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். அவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் டெல்லி மாவட்ட பேரிடர் மீட்பு படை, தீயணைப்புத்துறை ஆகிய துறைகளை சேர்ந்த வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரம் மீட்பு பணி நடைபெற்று வந்த நிலையில் 3 தொழிலாளர்களும் உயிரிழந்த நிலையில் நேற்று மீட்டுள்ளனர்.

அவர்களில் சந்தோஷ்குமார் யாதவ், (19) சந்தோஷ் ( 38 ), 3வது தொழிலாளர் பெயர் அடையாளம் தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ரோகினி பிரேம் நகரில் 39 வயதுடைய நபர் மின்சாரம் தாக்கி பலியானார். புதிய உஸ்மான் பூரில்,சாலிமார் பாக்கில் 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதன் மூலம் மழை பாதிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் விமானநிலையத்தில் பலியான ரமேஷ் குமாரின் குடும்பத்துக்கு விமான போக்குவரத்து அமைச்சகம் ரூ.20 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது.

The post டெல்லி மழை பலி 8 ஆக உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: