கோயில் என்று அழைப்பதால் தெய்வங்களாக உணரும் ஆபத்து: தலைமை நீதிபதி சந்திரசூட் பேச்சு

கொல்கத்தா மாநாட்டில் நீதித்துறைதான் எங்களுக்கு கோயில் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பேசினார். இந்தவிழாவில் தலைமை நீதிபதி சந்திரசூட் பேசியதாவது: நீதித்துறையை பொறுத்தவரை, ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தன் விருப்பப்படி சிந்திக்கவும் பேசவும், அவர்கள் விரும்பியபடி வழிபடவும், அவர்கள் விரும்பியவரைப் பின்பற்றவும், அவர்கள் விரும்பியதைச் சாப்பிடவும், அவர் அல்லது அவள் விரும்பியவரை திருமணம் செய்யவும் ஒரு ஒருங்கிணைந்த அரசியலமைப்பு நெறிமுறையை வழங்குகிறது.

நீதிமன்றம் நீதியின் கோயில் என்று மக்கள் சொல்வதால், அந்த கோயில்களில் உள்ள தெய்வங்களாக எங்களை உணரும் பெரும் ஆபத்து உள்ளது. மக்களின் சேவையாளராக நீதிபதியின் பாத்திரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அரசியலமைப்பு அறநெறி பற்றிய இந்த கருத்துக்கள் உயர் நீதித்துறையின் நீதிபதிகளுக்கு மட்டுமல்ல, மாவட்ட நீதித்துறைக்கும் முக்கியமானது. நீதிபதிகள் தங்கள் சொந்த சித்தாந்தங்களைப் பற்றி தீர்ப்புகளில் எழுதுவது அதிகரித்து வருகிறது. எது சரி எது தவறு என்ற நீதிபதியின் தனிப்பட்ட கருத்துக்கள் அரசியலமைப்பு நெறிமுறைகளை மீறக்கூடாது. இவ்வாறு கூறினார்.

The post கோயில் என்று அழைப்பதால் தெய்வங்களாக உணரும் ஆபத்து: தலைமை நீதிபதி சந்திரசூட் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: