தனியா துவையல்

தேவையானவை:

தனியா – 50 கிராம்,
உளுத்தம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்,
பெருங்காயம் – ஒரு துண்டு,
காய்ந்த மிளகாய் – 5,
மிளகு – ¼ டீஸ்பூன்,
புளி, உப்பு,
வெல்லம் – சிறிதளவு,
நல்லெண்ணெய் – தேவைக்கு.

செய்முறை:

கடாயில் எண்ணெயின்றி தனியாவை வாசனை வரும் வரை வறுத்து எடுக்கவும். பின் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயம், மிளகை வறுத்தெடுத்து ஆறியதும் எல்லாவற்றையும் புளி, உப்பு, வெல்லம் சேர்த்து தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைத்தெடுக்கவும். தேவைப்பட்டால் மிளகை நீக்கி ¼ டீஸ்பூன் எள் வறுத்து சேர்த்து அரைக்கலாம்.

 

The post தனியா துவையல் appeared first on Dinakaran.