பைபாஸ் சாலையில் சிதறிபயடி பாதுகாப்பின்றி தென்னைமட்டை ஏற்றிச்செல்லும் லாரிகளால் ஆபத்து: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கரூர், ஜூன் 25: கரூர் பைபாஸ் சாலைகளில் தென்னை மட்டைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், பாதுகாப்பின்றி செல்வதால் தென்னை மட்டைகள் சாலைகளில பரவி கிடப்பதால் விபத்து ஏற்படுகிறது. கரூர் மாநகரை ஓட்டி மதுரை, சேலம், திருச்சி, கோவை போன்ற முக்கிய நகரங்களுக்கு பைபாஸ் சாலை செல்கிறது. கரூர் மாவட்டத்தை அடுத்துள்ள நாமக்கல் மாவட்டங்களில் அதிகளவு தென்னை நார் தொழிற்சாலை உள்ளது. இது போன்ற தொழிற்சாலைகளுக்கு, கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தென்னை மட்டைகள், வேன், டிராக்டர் மற்றும் லாரிகளில் ஏற்றிச் செல்லப்படுகிறது.

அவ்வாறு தென்னை மட்டைகள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள், திறந்த நிலையில் செல்வதால் தென்னை மட்டைகள் காற்றின் காரணமாக சாலையில் ஆங்காங்கே விழுந்து கிடக்கிறது. இந்நிலையில், பைபாஸ் சாலையில் அதிக வேகத்தில் செல்லும் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள், தென்னை மட்டைகளில் ஏறி இறங்கி அடிக்கடி விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். குறிப்பாக, கரூர் சேலம் பைபாஸ் சாலையின் மாவட்ட எல்லையில் இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடைபெறுகிறது. எனவே, இதனை கட்டுப்படுத்தும் வகையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பார்வையிட்டு முறைப்படுத்த வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

The post பைபாஸ் சாலையில் சிதறிபயடி பாதுகாப்பின்றி தென்னைமட்டை ஏற்றிச்செல்லும் லாரிகளால் ஆபத்து: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: