வீட் கோகனட் குக்கீஸ்

Wheat Coconut Cookies

தேவையான பொருட்கள்

1 கப் கோதுமை மாவு
¾ கப் டெசிகெடட் கோகனட்
100 கிராம் வெண்ணெய்
½ கப் சர்க்கரை பவுடர்
3 டேபிள் ஸ்பூன் பால்
1 டீஸ்பூன் சோடா உப்பு
1 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்.

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் எடுத்து அதனை பீட்டர் வைத்து நன்றாக அடித்துக் கொள்ளவும். பிறகு, அதில் பவுடர் சர்க்கரை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். வெண்மை நிறம் சிறிது மாறியதும் கோதுமை மாவு, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் சேர்த்து கலந்து விடவும். பின்னர் டெசிகெடட் கோகனட் சேர்த்து கலந்துவிட்டு பால் ஊற்றி அழுத்தம் கொடுக்காமல் ஒன்றுசேர்த்து பிசைந்து வைக்கவும். பிறகு பட்டர் பேப்பரில் வெண்ணெய் தடவி ட்ரேயில் வைக்கவும். பிறகு சிறிய உருண்டைகளாக உருட்டி வட்டமாக தட்டி வைக்கவும். பின்னர் டெசிகெடட் கோகனடில் பிரட்டி எடுத்து இடைவெளி விட்டு ட்ரேயில் வைக்கவும். மைக்ரோவேவ் ஓவனை கன்வக்ஷன் மோடில் 170 டிகிரி செல்சியஸ் 2 நிமிடம் ப்ரீஹூட் செய்து இந்த ட்ரேயை ஓவனில் வைத்து 17 லிருந்து 20 நிமிடம் வரை பேக் செய்து எடுக்கவும். பிறகு வெளியே எடுத்து கூலிங் ரேக்கில் வைக்கவும். சூடு தணிந்த பின்னர் எடுத்து பரிமாறவும். சுவையான வீட் கோகனட் குக்கீஸ் தயார்.

The post வீட் கோகனட் குக்கீஸ் appeared first on Dinakaran.