சென்னை ஈக்காட்டுத்தாங்கல் மெட்ரோ ரயில் வாசலில் படுத்திருந்தவர்கள் மீது ஆசிட் வீச்சு: 2 பெண்கள், 1 முதியவர், 3 குழந்தைகள் காயம்!

சென்னை: சென்னை ஈக்காட்டுத்தாங்கல் மெட்ரோ ரயில் நிலைய வாசலில் படுத்திருந்தவர்கள் மீது ஆசிட் வீசி தாக்கப்பட்டதில் குழந்தைகள் உள்பட 5 பேர் காயமடைந்துள்ளனர். ஆசிட் வீச்சில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை ஈக்காட்டுத்தாங்களில் சாலையோரம் வசிக்கக்கூடிய மக்கள் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வெளியே நேற்று இரவு படுத்து உறங்கி கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர் படுத்து உறங்கியவர்கள் மீது ஆசிட் பாட்டிலை வீசி எரித்ததாக கூறப்படுகிறது. இந்த ஆசிட் வீச்சு சம்பவத்தில் இரண்டு பெண்கள், ஒரு முதியவர், 3 குழந்தைகள் காயமடைந்ததாக கூறப்படுகிறது. அந்த பகுதி முழுவதும் ஆசிட் நெடி வீசியத்துடன் பலருக்கும் கண்களில் எரிச்சல் ஏற்பட்டது. தகவலறிந்த கிண்டி போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் சாலையோரம் தங்கும் ஒரு தரப்பினருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்ததாகவும், இந்த தகராறு காரணமாக ஆசிட் வீச்சு நிகழ்ந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

 

The post சென்னை ஈக்காட்டுத்தாங்கல் மெட்ரோ ரயில் வாசலில் படுத்திருந்தவர்கள் மீது ஆசிட் வீச்சு: 2 பெண்கள், 1 முதியவர், 3 குழந்தைகள் காயம்! appeared first on Dinakaran.

Related Stories: