சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்னையில் இருந்து இன்று இரவு வெறும் கண்களால் பார்க்க முடியும் : வானியல் ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு!!

சென்னை : சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்னையில் இருந்து இன்று இரவு வெறும் கண்களால் பார்க்க முடியும் என நாசா தெரிவித்துள்ளது. விண்வெளியில் நாசா உடன் இணைந்து பல்வேறு நாடுகள் அமைத்துள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் 13 முறை பூமியை சுற்றி வருகிறது. மணிக்கு 28 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .விண்வெளி வீரர்கள் வாழவும், பரிசோதனைகளை மேற்கொள்ளவும் கூடிய இடமாக இது செயல்படுகிறது. சர்வதேச விண்வெளி மையம் குறிப்பிட்ட பகுதிகளில் வானில் தெரியும் நேரம் பற்றிய தகவல்களை நாசா வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் சென்னையில் இருந்து இன்று இரவு 7.09 மணி முதல் வானத்தில் 7 நிமிஷங்கள் வரை 400 கிமீ தூரத்தில் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை வானில் வெறும் கண்களால் பார்க்க முடியும் என நாசா அறிவித்துள்ளது. சென்னை மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பார்க்க முடியும் என அதன் பட்டியலை நாசா வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் வானியல் ஆர்வலர்கள், மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் சர்வதேச விண்வெளி மையத்தை பார்க்க ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.இந்நிலையில் சென்னை பெரியார் அறிவியல் மையம் போன்ற இடங்களில் இதனை காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

The post சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்னையில் இருந்து இன்று இரவு வெறும் கண்களால் பார்க்க முடியும் : வானியல் ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: