மோடி ஆட்சியின் மூலம் நாடு முழுவதும் தீய பிரசாரம்: செல்வப்பெருந்தகை விமர்சனம்

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கை: ஆப்பிரிக்கர்கள் போல் தென்னிந்தியர்கள் இருக்கிறார்கள் என்ற கருத்தை விமர்சிக்கிற பிரதமர் மோடி, நிற பாகுபாடு அரசியலுக்கு ஆதரவாக தூபம் போட்டு வருகிறார். அமெரிக்க குடியரசு தலைவராக பராக் ஒபாமா 2010ல் இந்தியாவுக்கு வந்த போது, அன்றைய பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து இந்தியாவில் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு எதிராக வளர்ந்து வருகிற அச்சுறுத்தலையும், அதன்மூலம் இந்து தேசியவாதத்தை பா.ஜ வளர்ப்பதையும் கவலையோடு பகிர்ந்து கொண்டார். அன்று பராக் ஒபாமா எதை கண்டு அச்சம் தெரிவித்தாரோ அத்தகைய அச்சத்தை 10 ஆண்டுகால மோடி ஆட்சியின் மூலம் நாடு முழுவதும் தீய பிரசாரம் பரப்பப்பட்டு வருகிறது.

மக்களவை தேர்தலில் தோற்பது உறுதியானதை முற்றிலும் உணர்ந்து விட்ட மோடி, மக்களை பிளவுபடுத்துவதற்கு இல்லாததை எல்லாம் இட்டுக்கட்டி அபவாதங்களை கூறி வருகிறார். மக்கள் விரோத ஆட்சியினால் ஏற்பட்ட பாதிப்புகளை மூடி மறைப்பதற்கு வகுப்புவாத, நச்சு கருத்துகளை பரப்பி மக்களை பிளவுபடுத்தும் மோடியின் முயற்சியை மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் மக்கள் மன்றத்தில் முறியடித்து வருகிறார்கள். இவர்களது கடும் பரப்புரையினால் வகுப்புவாத மோடி ஆட்சி வீழ்த்தப்பட்டு, மதநல்லிணக்கத்தில் நம்பிக்கையுள்ள இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகியிருக்கிறது. இதன்மூலம் நல்லாட்சியை இந்தியா கூட்டணி அமைப்பதை மோடி உள்ளிட்ட எவராலும் தடுக்க முடியாது.

The post மோடி ஆட்சியின் மூலம் நாடு முழுவதும் தீய பிரசாரம்: செல்வப்பெருந்தகை விமர்சனம் appeared first on Dinakaran.

Related Stories: