2வது நாளாக குறைந்த தங்கம் விலை; சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.52,920க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.52,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.6,615க்கு விற்கப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 20 காசு உயர்ந்து ரூ. 88.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக குறைந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 120 குறைந்தது.

திங்கள்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 80 அதிகரித்த நிலையில், மறுநாள் செவ்வாய்க்கிழமையும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 240 அதிரடியாக அதிகரித்தது. எனினும், நேற்று புதன்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 80 குறைந்து ஒரு சவரன் ரூ. 53,040-க்கும், கிராமுக்கு ரூ. 10 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 6,630-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.52,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.6,615க்கு விற்கப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 20 காசு உயர்ந்து ரூ. 88.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post 2வது நாளாக குறைந்த தங்கம் விலை; சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.52,920க்கு விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: