மோடி யாரென்றே தெரியாது!: அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் 40% அமெரிக்கர்கள் கருத்து…!!

வாஷிங்டன்: 2023-ல் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் 40% பேர் மோடி யார் என்றே தெரியாது என்று கூறியுள்ளதாக ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. மோடி பற்றி கேள்விப்பட்டுள்ளதாக கூறிய அமெரிக்கர்களில் 21% பேர் மட்டுமே அவர் மீது நம்பிக்கை உள்ளதாக கூறியுள்ளனர். மோடியை தெரியும் என கூறிய அமெரிக்கர்களில் 37% பேர் அவர் சரியான முடிவுகளை எடுப்பார் என நம்பவில்லை என்று கூறியுள்ளனர்.

உலகத் தலைவர்களில் 26-வது இடத்தில் மோடி -ஆய்வறிக்கை:

கடந்த மார்ச்சில் அமெரிக்காவில் யுகோவ் அமைப்பு உலக தலைவர்களின் செல்வாக்கு பற்றி ஆய்வு நடத்தியது. யுகோவ் அமைப்பின் ஆய்வில், பிரதமர் மோடிக்கு உலகத் தலைவர்கள் வரிசையில் அமெரிக்கர்கள் 26-வது இடம் அளித்துள்ளனர். ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், சீன அதிபர் ஸி ஜின்பிங் ஆகியோருக்கு பிறகே அமெரிக்கர்கள் மோடிக்கு இடம் அளித்துள்ளதாக ஆய்வு முடிவில் தகவல் வெளியாகியுள்ளது.

மோடி ஆட்சியில் இந்தியாவின் புகழ் உயரவில்லை:

பிரதமர் மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் உலக அரங்கில் இந்தியாவின் புகழோ, செல்வாக்கோ உயரவில்லை என்று ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் மதிப்பு உயராதது மட்டுமல்ல, 2008 உடன் ஒப்பிட்டால் பல நாடுகளில் இந்தியாவின் மதிப்பு குறைந்தது அம்பலமாகியுள்ளது. மோடி ஆட்சியில் உலக நாடுகள் இடையே இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளதாக பாஜக கூறுவது வெறும் கானல் நீரே. இந்தியாவின் செல்வாக்கு, மோடியின் அறிமுகம், திறமை உள்ளிட்டவை குறித்து உலக அளவில் பல ஆய்வுகள் நடத்தப்பட்டது.

The post மோடி யாரென்றே தெரியாது!: அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் 40% அமெரிக்கர்கள் கருத்து…!! appeared first on Dinakaran.

Related Stories: