கோவை தொழிலதிபரிடம் ரூ.300 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கு: ரூ.12 கோடி பணம், 140 சவரன் நகை, 100 கோடி மதிப்பிலான ஆவணங்கள் மீட்பு..!!

கோவை: கோவையில் தொழிலதிபரிடம் ரூ.300 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில் ரூ.12 கோடி பணம், 140 சவரன் நகை, 100 கோடி மதிப்பிலான ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த சிவராஜ் என்பவர் பீளமேடு பகுதியில் மின் காற்றாலை அலுவலகம் நடத்தி வருகிறார். தொழிலதிபர் சிவராஜ் அலுவலகத்தில் பணிபுரிந்த 13 பேர், அவருக்கு சொந்தமான ரூ.200 கோடி சொத்துகளுக்கு போலி ஆவணம் தயார் செய்து மோசடி செய்துள்ளனர். சிவராஜ் அலுவலகத்தில் பணிபுரிந்த 13 பேரும் சேர்ந்து ரூ.100 கோடி பணத்தையும் மோசடி செய்துள்ளனர். ஒருகட்டத்தில், மோசடி நடைபெற்றதை கண்டறிந்து அதிர்ச்சியடைந்த சிவராஜ், கோவை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

சிவராஜ் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மோசடியில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், தொழிலதிபரிடம் ரூ.300 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில், 5 பேரை காவலில் எடுத்து விசாரித்த கோவை போலீஸ், அவர்களிடம் இருந்து ரூ.12 கோடி பணம், 140 பவுன் நகை, ரூ.100 கோடி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்களின் வங்கி கணக்குகளையும் முடக்கி போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. நீதிமன்றத்தில் பணம் மற்றும் ஆவணங்களை ஒப்படைத்த போலீஸ் மீண்டும் 5 பேரை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தது.

The post கோவை தொழிலதிபரிடம் ரூ.300 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கு: ரூ.12 கோடி பணம், 140 சவரன் நகை, 100 கோடி மதிப்பிலான ஆவணங்கள் மீட்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: