திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5,000 கோழிகள் உயிரிழப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அரங்கன் துர்கம் பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் தீ விபத்து ஏற்பட்டு 5,000 கோழிகள் உயிரிழந்துள்ளது. துரை என்பவருக்குச் சொந்தமான கோழிப்பண்ணையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. முதற்கட்ட தகவலின் படி மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். ஆம்பூர் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பர் அடுத்த அரங்கன் துர்கம் பகுதியில் துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 9 ஆண்டுகளாக விவசாயம் மற்றும் கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று காலை 7.30 மணி அளவில் கோழிப்பண்ணையில் திடீரென மின்கசிவு ஏற்பட்டுள்ள தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவெண கொழுந்து விட்டு எரிந்ததால் பண்ணையில் இருந்த 5000-க்கும் மேற்பட்ட கோழிகள் எரிந்து நாசமாயின. இதனை தொடர்ந்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அங்கு இருந்த மக்கள் மற்றும் பண்ணை உரிமையாளர்கள் தீயணைப்புத்துறையினருடன் சேர்ந்து தீயை அனைத்து வருகின்றனர். இருப்பினும் பண்ணை முழுவதும் தீ அதிமாக பரவியது. பண்ணையில் இருந்த 5000 கோழிகள் தீயில் எரிந்தது. 5000 கோழிகள் மட்டுமின்றி 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தீவனங்களும் எரிந்து நாசமானது இந்த விபத்து அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் மற்றும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

The post திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5,000 கோழிகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: