தமிழ்நாட்டில் நேற்று 4 இடங்களில் கனமழை; கீழ்பென்னாத்தூரில் 9 செ.மீ. மழை பதிவு..வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் நேற்று 4 இடங்களில் கனமழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கீழ்பென்னாத்தூர், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி.அணை பகுதியில் தலா 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. வேலூர் மாவட்டம் மேல்ஆலத்தூர், செங்கம் பகுதியில் தலா 7 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர், கெடார், அவலூர்பேட்டை, நெமூர், கிருஷ்ணகிரி நெடுங்கல், மேட்டூரில் தலா 5 செ.மீ. மழை பதிவானது.

நாட்றம்பள்ளி, சூரப்பட்டு, ஒகேனக்கல், வேலூர், குடியாத்தம், காட்பாடியில் தலா 4 செ.மீ. மழை பதிவானது. இதேபோல், ஜமுனாமரத்தூர், விரிஞ்சிபுரம் உட்பட 10 இடங்களில் தலா 3 செ.மீ. மழை பெய்துள்ளது. திருக்கோவிலூர், கடலூர், பர்கூர், சிதம்பரம் உள்ளிட்ட 8 இடங்களில் தலா 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தண்டராம்பட்டு, மணம்பூண்டி உள்ளிட்ட 13 இடங்களில் தலா 1 செ.மீ. மழை பதிவாகி இருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

நாகையில் மிதமான மழை:

நாகையில் மிதமான மழை பெய்து வருகிறது. நாகை, நாகூர், பனங்குடி, புத்தூர், மஞ்சகொல்லை, சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்கிறது. கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் கருமேகம் சூழ்ந்து திடீர் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post தமிழ்நாட்டில் நேற்று 4 இடங்களில் கனமழை; கீழ்பென்னாத்தூரில் 9 செ.மீ. மழை பதிவு..வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: