திருச்செந்தூர் முருகன் கோயிலில் உண்டியல் வருமானம் ரூ.2.49 கோடி

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல் வருமானம் ரூ.2.49 கோடி . மேலும் 1.1 கிலோ தங்கமும், 24 கிலோ வெள்ளியும் கிடைத்துள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் வருமானம் மாதந்தோறும் எண்ணப்படுகிறது. இதையடுத்து, கோயில் வசந்த மண்டபத்தில் நேற்று கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன் தலைமையில், இணை ஆணையர் கார்த்திக் முன்னிலையில் உண்டியல் எண்ணப்பட்டன.

இதில், தூத்துக்குடி உதவி ஆணையர் செல்வி, கோயில் அலுவலக கண்காணிப்பாளர் ரவீந்திரன், ஆய்வர் செந்தில்நாயகி, அறங்காவலர் குழுத்தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தமிழ்பாண்டியன், பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன் மற்றும் சிவகாசி பதினெண் சித்தர் மடம் குருகுல வேத பாடசாலை உழவாரபணிக்குழுவினர் மற்றும் கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

இந்த உண்டியல் எண்ணிக்கையில் 2 கோடியே 49 லட்சத்து 44 ஆயிரத்து 699 ரூபாய் கிடைத்துள்ளது. அதே போல், தங்கம் 1 கிலோ 100 கிராமும், வெள்ளி 24 கிலோவும், 326 வெளிநாட்டு கரன்சிகளும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

The post திருச்செந்தூர் முருகன் கோயிலில் உண்டியல் வருமானம் ரூ.2.49 கோடி appeared first on Dinakaran.

Related Stories: