பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டு வரும் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ்

டெல்லி: கர்நாடகத்தை உலுக்கும் பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டு வரும் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகம், ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா 500-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், அதை 2,800-க்கும் மேற்பட்ட காணொளியாக பதிவு செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரில், ஹொளே நரசிப்புரா காவல் நிலையத்தில் பிரஜ்வல் ரேவண்ணா, அவரது தந்தையும் முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணா ஆகிய இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பிரஜ்வலின் மீது பல பெண்கள் புகார் அளித்ததைத் தொடர்ந்து அவர் ஜெர்மனிக்கு தப்பியோடிவிட்டார்.

இந்த நிலையில் சிபிஐ கோரிக்கையை ஏற்று சர்வதேச போலீஸ் அமைப்பான இண்டர்போல் ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது. இண்டர்போல் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள அனைத்து நாடுகளுக்கும் பிரஜ்வல் பற்றிய தகவல்களை அளிக்கக் கோரி ப்ளு கார்னர் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது.

The post பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டு வரும் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Related Stories: