கந்தப்பரிச்சான் ஆறு குறுக்கே ₹4.95 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி தீவிரம்

*கிராம மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேறுகிறது

முத்துப்பேட்டை : கந்தப்பரிச்சான் ஆறு குறுக்கே ரூ.4.95 கோடியில் புதிய பாலம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் கிராம மக்களின் நீண்டகால கனவு நினைவாகிறது.
முத்துப்பேட்டை அடு த்த ஜாம்புவானோடை ஊராட்சி என்பது ஒன்றியத்தில் பெரிய ஊராட்சிகளில் ஒன்றாகும். ஜாம்புவானோடை தெற்குகாடு ராணுவ காலனிக்கும் – கொல்லைகாடு கிராமத்திற்கு இடையே செல்லும் கந்தப்பரிச்சான் ஆறு குறு க்கே பாலம் ஒன்று கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதன் மூலம் இப்பகுதி மக்கள் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் கடந்து சுற்றி வந்து செல்லும் நிலை மாறும். இதன்மூலம் இப்பகுதி மக்களுக்கு பல்வேறு வசதிகளை ஏற்படுத்தும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் கடந்த 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதிமுக அரசு கண்டுக்கொள்ளவே இல்லை. இந்நிலையில் தமிழகத்தில் தற்போதைய திமுக அரசு பொறுப்பேற்றதுடன், அப்பகுதி மக்கள் மீண்டும் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து தமிழ்நாடு அரசு நபார்டு வங்கி நிதியுதவியுடன் சுமார் ரூ.4.95 கோடி நிதியில் புதிய பாலம் கட்ட முடிவு செய்து நிதி ஒதுக்கீடு செய்தது. இதனையடுத்து பாலம் கட்டுமான பணிகள் சென்ற ஆண்டும் செப்டம்பர் மாதம் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் மண் சோதனை, இடம் சோதனைகள் செய்யப்பட்டு அடிப்பகுதி பில்லர் போன்ற கட்டுமான பணிகள் முழுவீச்சில் இரவு பகலாக நடைபெற்று வருகிறது. இந்த பணி மூலம் அப்பகுதியில் மக்களின் நீண்டகால கனவு நினைவாக போகிறது என மகிழ்ச்சியில் இப்பகுதி மட்டுமின்றி சுற்று பகுதி கிராம வாசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்நிலையில் இந்த பாலம் கட்டுமான பணியை நேற்று திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்து நேரில் ஆய்வு செய்து அங்குள்ள அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடம் ஆலோசனை நடத்தினர். மேலும் பணிகள் முறையாக பணிகள் நடைபெறுகிறதா? எனவும் ஆய்வு செய்தார். பின்னர் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தினார்.அப்போது திமுக ஒன்றிய செயலாளர் இரா.மனோகரன், விவசாய சங்க மாவட்ட துணைச்செயலாளர் முருகையன், கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் உமேஷ் பாபு, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முருகையன், ஊராட்சி மன்ற தலைவர் லதா பாலமுருகன் உட்பட பலரும் உடன் இருந்தனர்.

The post கந்தப்பரிச்சான் ஆறு குறுக்கே ₹4.95 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: