கஞ்சா கடத்தல் வழக்கு!: தமிழ்நாடு அரசின் போதை தடுப்பு சிறப்பு பிரிவின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கது..ஐகோர்ட் கிளை பாராட்டு..!!

மதுரை: தமிழ்நாடு அரசின் போதை தடுப்பு சிறப்பு பிரிவின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு கிட்டத்தட்ட 600 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் தஞ்சை மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டு தற்போது வரை சிறையில் உள்ளனர். இந்த வழக்கில் தமிழ்நாடு அரசின் சிறப்பு போதை தடுப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இதனிடையே, கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பரிமலதா உள்ளிட்ட பலர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமின் வழங்கக்கோரி மனுதாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணையின் போது நீதிபதி புகழேந்தி, தமிழ்நாடு அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார். குறிப்பாக இதுபோன்ற வழக்குகளில் முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனரா? என கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசின் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் செந்தில்குமார் ஆஜராகி, அறிக்கை ஒன்று தாக்கல் செய்திருந்தார்.

அதில், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாடு அரசு வெளிமாநிலத்தில் இருந்து தமிழகத்திற்குள் போதை பொருட்களை அனுப்பியது தொடர்பாக ஒடிசா, உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் 2486 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கைக்கு தற்போது நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்த வழக்குகளில் அதிக அக்கறை எடுத்து செயல்பட்ட தமிழ்நாடு அரசின் போதை தடுப்பு சிறப்பு பிரிவின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கது.

போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவாகும் குற்றம் சமூகத்திற்கு எதிரான குற்றம் பார்க்க வேண்டும். “NIB-CID விசாரணை அதிகாரிகளுக்கு உரிய பயிற்சி வழங்க வேண்டும். வழக்குகளில் குற்றச்செயலில் உள்ள தொடர்பை போதைப்பொருள் தடுப்பு புலனாய்வு கண்டுபிடிக்க வேண்டும். போதைப்பொருள் குற்றவாளிகளை கைது செய்வதோடு மட்டுமல்லாமல் குற்ற செயல்களை கண்டுபிடித்து தண்டனை பெற்று தர வேண்டும் என நீதிபதி தெரிவித்தார். தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று கஞ்சா கடத்தல்காரர்களின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

 

The post கஞ்சா கடத்தல் வழக்கு!: தமிழ்நாடு அரசின் போதை தடுப்பு சிறப்பு பிரிவின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கது..ஐகோர்ட் கிளை பாராட்டு..!! appeared first on Dinakaran.

Related Stories: