மார்த்தாண்டம் இரும்பு மேம்பாலத்தில் திடீர் பள்ளம் விழுந்ததால் பரபரப்பு: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தம்

கன்னியாகுமாரி: கன்னியாகுமாரி மாவட்டம் மார்த்தாண்டம் இரும்பு மேம்பாலத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையாக திருவனந்தபுரம், கன்னியாகுமரியை இணைக்கும் பகுதியான மார்த்தாண்டத்தில் சாலையை விரிவாக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இதனிடையே ஒன்றிய அமைச்சராக பொன் ராதாகிருஷ்ணன் இருந்த போது இந்த பகுதியில் இரும்பிலான பாலம் அமைப்பதற்கான திட்டம் தீட்டப்பட்டது.

இரும்பிலான பாலம் இங்கு அமைக்கக்கூடாது என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் இத்தகைய பாலம் ஆபத்தாக முடியும் என்றும் கோரிக்கை வைத்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. அதனை மீறி 2016ம் ஆண்டு சுமார் ரூ.228 கோடி இந்த பாலம் துவங்கப்பட்டது. இந்த பாலம் திறந்த போது பாலத்தில் வாகனங்கள் செல்லும் போது அசைவு ஏற்பட்டதாக குற்றசாட்டு எழுந்தது. அப்போது ஒன்றிய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் 100 வருடங்கள் இந்த பாலம் தாங்கிப்பிடிக்கும் என்று உத்தரவாதம் அளித்தார். ஆனால் தற்போது இந்த பகுதியில் 3,4 பகுதிகளில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

அதிலும் பம்பன் பகுதியிலிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள பாலத்தில் கம்பிகள் உடைந்து தெரியும் அளவிற்கு கங்கிரெட்டுகள் சேதம் அடைந்து பாலத்தில் ஓட்டை விழுந்துள்ளது. இந்த பகுதியில் கனரக வாகனங்கள் சென்றிருந்தால் பெறும் விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பும் ஏற்பட்டிருக்கும் ஆனால் தற்போது இந்த பகுதியில் போக்குவரத்துக்கு நிறுத்தப்பட்டு பாலத்தின் கீழ் பகுதியில் போக்குவரத்துக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் விளவங்கோடு சட்டமன்ற காங்கிரஸ் வேட்பாளர் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த பாலத்தின் பாதிப்பு குறித்து உடனடியாக ஆய்வு செய்து மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் சார்பில் எழுப்பப்பட்டுள்ளது.

 

The post மார்த்தாண்டம் இரும்பு மேம்பாலத்தில் திடீர் பள்ளம் விழுந்ததால் பரபரப்பு: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தம் appeared first on Dinakaran.

Related Stories: