விவசாயம், குடிநீருக்கு தடையின்றி 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்


சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கோடை காலத்தில் விவசாய பணிகளுக்கு நிலத்தடி நீரை மட்டுமே நம்பி இருக்கும் லட்சக்கணக்கான விவசாயிகள் பாசனத்திற்கு மின் மோட்டார்களை நம்பியுள்ளனர். தற்போது விவசாயத்திற்கு 24 மணி நேரம் வழங்க வேண்டிய மும்முனை மின்சாரத்தை, தமிழக அரசு 8 மணி நேரம் மட்டுமே வழங்கி வருகிறது. அதுவும் தொடர்ச்சியாக வழங்காமல் முறை வைத்து வழங்கப்படுகிறது. அதிலும் பல நேரங்களில் ‘லோ வோல்டேஜ்’ மின்சாரம் வழங்கப்படுவதால், விவசாய மின் மோட்டார்கள் பழுதடைந்து மேலும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

எனவே, கோடை கால பயிர்களை காப்பாற்ற 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். அதுவும் ‘லோ வோல்டேஜ்‘ போன்ற குறைந்த மின் அழுத்தத்தில் மின்சாரம் வழங்காமல், 24 மணி நேரமும் மும்முனை மின்சாரத்தை அடுத்த பருவ மழை தொடங்கும் வரை விவசாய பணிகளுக்கு வழங்க வேண்டும். மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய உள்ளாட்சி அமைப்புகள் தமிழ்நாடு மற்றும் குடிநீர் வாரியம் மின்சார மோட்டார்களை 20 மணி நேரம் இயக்கி குடிநீரை மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் சேகரித்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

தற்போது 14 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளதால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். குடிநீர் தேவை கூடுதலாக தேவைப்படும் இந்த கோடையில், மின் மோட்டார்களை 22 மணி நேரமாக இயக்கி பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post விவசாயம், குடிநீருக்கு தடையின்றி 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: