ஆதிவராக பெருமாள் கோயில் ஜெயந்தி விழா கொண்டாட்டம்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் ஆதிவராக பெருமாள் கோயிலில் வராக ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. மாமல்லபுரம் பொதுப்பணித்துறை சாலையில் ஆதிவராக பெருமாள் கோயில் உள்ளது. இங்கு, ஆதிவராக பெருமாளின் ஜென்ம நட்சத்திரம் அன்று ஆண்டுதோறும் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு, வராக ஜெயந்தி விழா நேற்று முன்தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

நேற்று காலை வராக பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு ஞானபிரான் ஸ்ரீதேவி – பூதேவியுடன் பல்லக்கில் எழுந்தருளி 4 ராஜவீதிகள் வழியாக திருவீதியுலா வந்தார். இதனை தொடர்ந்து, காலை 10 மணி முதல் 12 மணி வரை சிறப்பு அபிஷேகம் மற்றும் திருப்பாவை சாற்று முறையும், மாலை 6 மணிக்கு ஊஞ்சல் சேவையும் நடந்தது. இரவு, ஞானபிரான் ஸ்ரீதேவி – பூதேவியுடன் சந்திர பிரபை வாகனத்தில் எழுந்தருளி 4 ராஜ வீதிகள் வழியாக திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார். வழி நெடுகிலும், பக்தர்கள் கற்பூரம் எற்றி ஞானபிரானை வணங்கினர்.

The post ஆதிவராக பெருமாள் கோயில் ஜெயந்தி விழா கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: