புழல் சிறைவாசிகள் 91.43% தேர்ச்சி

சென்னை: பள்ளி மாணவர்களை போன்றே சிறைச்சாலைகளில் உள்ளவர்களும் கல்வி பயிலும் வகையில், சிறைக்குள் பாட புத்தகங்கள் வழங்கப்பட்டு கல்வி ஆர்வலர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், தனித்தேர்வர்களாக பொதுத்தேர்வுகளை எழுத சிறைச்சாலைகளுக்குள் பிரத்யேக தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, சிறைவாசிகள் தேர்வு எழுதி வருகின்றனர். அதன்படி புழல் சிறையில் விசாரணை, தண்டனை, மகளிர் என 3 பிரிவுகளிலும் 36 கைதிகள், பிளஸ் 2 தேர்வெழுத விண்ணப்பித்து, 35 பேர் மட்டுமே எழுதினர். நேற்று தேர்வு முடிவுகள் வெளியானதில், 32 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். புழல் தண்டனை சிறையில் தேர்வு எழுதிய 26 ஆண் கைதிகளில் 24 பேரும், புழல் விசாரணை சிறையில் 6 ஆண் கைதிகளும், புழல் மகளிர் சிறையில் 2 பெண் கைதிகள் என 32 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக சிறையில் தேர் எழுதியதில் 91.43 சதவீதம் தேர்ச்சி விழுக்காடு அமைந்துள்ளது. சிறைச்சாலையில் தேர்வு எழுதி வெற்றிபெற்ற கைதிகளுக்கு சிறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

The post புழல் சிறைவாசிகள் 91.43% தேர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: