நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவிக்கு HCL-ல் உடனடி வேலை..!!

சேலம்: நான் முதல்வன் திட்டத்தில் பயிற்றி பெற்ற மாணவிக்கு HCL-ல் உடனடி வேலை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை அரசு தேர்வுகள் இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டார். 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 தேர்வில் 7,19,196 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 3,93,890 மாணவிகளும், 3,25,305 மாணவர்களும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களைவிட 4.07 சதவீதம் மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். இந்நிலையில், நான் முதல்வன் திட்டத்தில் பயிற்றி பெற்ற மாணவிக்கு HCL-ல் வேலை வழங்கப்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சி பள்ளியில் படித்து 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 569 மதிப்பெண்கள் பெற்ற மாணவி சிவானிஸ்ரீ -க்கு உடனடி வேலை வழங்கப்பட்டிருக்கிறது. 12-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோதே சில மாதங்களாக நான் முதல்வன் திட்டத்தில் சிவானிஸ்ரீ பயிற்சி பெற்று வந்துள்ளார். உயர்கல்வி வழிகாட்டுதலின்கீழ் பயிற்சி பெற்று எச்.சி.எல். நிறுவன பணிக்கு சிவானிஸ்ரீ தேர்வு பெற்றிருந்தார். பிளஸ் 2 தேர்வில் 569 மதிப்பெண் பெற்றதை அடுத்து எச்.சி.எல். நிறுவனத்தில் பணி பயிற்சிக்குதற்போது சிவானிஸ்ரீ தேர்வாகியுள்ளார். பணி பயிற்சி காலத்தின்போதே சிவானிஸ்ரீ-க்கு உயர்கல்வியும் அளிக்க எச்.சி.எல். நிறுவனம் பொறுப்பேற்றுள்ளது. அதன்படி, மாணவி சிவானிஸ்ரீயை சாஸ்த்ரா பல்கலை.யில் படிக்க வைப்பதாக எச்.சி.எல். நிறுவனம் அறிவித்துள்ளது.

The post நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவிக்கு HCL-ல் உடனடி வேலை..!! appeared first on Dinakaran.

Related Stories: