மதிப்பெண் பட்டியல்களை பள்ளிகளில் பதிவிறக்கம் செய்யலாம்: தேர்வுத்துறை அறிவிப்பு

சென்னை: தேர்வு முடிவுகள் வெளியானதும் அந்தந்தப் பள்ளிகளில் மதிப்பெண் பட்டியல்களை பதிவிறக்கம் செய்யலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது. அதன் தொடர்ச்சியாக 10 மணிக்கு மதிப்பெண் பட்டியல்களை பள்ளிகள் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து தேர்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து மேனிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களும் இன்று www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தை பயன்படுத்தி, ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள பயன்பாட்டு குறியீட்டை(User-ID) மற்றும் கடவுச் சொல்லைப் பயன்படுத்தி பிளஸ் 2 மாணவர்களுக்கான அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல்களை 9.45 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்த வேண்டும். அதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் தயார் நிலையி்ல வைத்திருக்க பள்ளித் தலைமை ஆசிரியர்களை அறிவுறுத்த வேண்டும்.

மேலும், முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டத்துக்கான அனைத்துப் பள்ளிகளின் தேர்வு முடிவுகள் மற்றும் பகுப்பாய்வு அறிக்கையை 10 மணிக்கு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

The post மதிப்பெண் பட்டியல்களை பள்ளிகளில் பதிவிறக்கம் செய்யலாம்: தேர்வுத்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: