பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு இன்று காலை 9.30க்கு வெளியாகிறது: இணையம், செல்போன் மூலம் அறியலாம்

சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவை இன்று காலை 9.30 மணிக்கு தேர்வுத்துறை வெளியிடுகிறது. தேர்வு எழுதிய மாணவ, மாணவியர் தங்கள் செல்ேபான்களிலும், தேர்வுத்துறை இணைய தளங்களிலும் முடிவுகளை உடனடியாக தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இயங்கும் 7,534 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி மேனிலைப் பள்ளிகளில் பிளஸ்2 படிக்கின்ற மாணவ, மாணவியருக்கான பொதுத் தேர்வு மார்ச் 1ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடந்தது. இந்த தேர்வில் தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த 7 லட்சத்து 72 ஆயிரத்து 200 மாணவ, மாணவிகள் எழுதினர். இவர்கள் தவிர தனித் தேர்வர்கள் 21,875 பேரும், சிறைவாசிகள் 125 பேரும் தேர்வில் பங்கேற்றனர். சென்ைன நகரில் 405 மேனிலைப் பள்ளிகளை சேர்ந்த 45 ஆயிரம் மாணவ மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். அவர்களுக்காக சென்னை நகரில் மட்டும் 180 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக 118 விடைத்தாள் சேகரிப்பு மையங்களுடன், பிளஸ்2 ேதர்வுக்கு 83 மையங்களில் விடைத்தாள் திருத்த ஏற்பாடு செய்யப்பட்டது. விடைத்தாள் திருத்தும் பணியில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 40 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டு, கடந்த வாரம் பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிந்தன. அதற்கு பிறகு மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணிகள் தொடங்கி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் குறித்து ஏற்கனவே தேர்வுத்துறை அறிவித்தபடி மே 6ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 9.30 மணி அளவில் தேர்வு முடிவுகளை சென்னையில் தேர்வுத்துறை வெளியிடுகிறது. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதும், மாணவர்களின் செல்போன் எண்களுக்கு உடனடியாக மதிப்பெண்களுடன் கூடிய முடிவுகள் தெரிவிக்கப்படும்.

இது தவிர மாணவர்கள் அந்தந்த பள்ளிகளில் தங்களின் தேர்வு முடிகளை தெரிந்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். இது தவிர அரசுத் தேர்வுகள் துறையின் www. dge.tn.gov.in மற்றும் www.tnresults.nic.in ஆகிய இணைய தளங்களில் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

The post பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு இன்று காலை 9.30க்கு வெளியாகிறது: இணையம், செல்போன் மூலம் அறியலாம் appeared first on Dinakaran.

Related Stories: