வார விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்களால் சிங்கப்பெருமாள் கோவில் அருகே போக்குவரத்து நெரிசல்

சென்னை: வார விடுமுறை முடிந்து வெளியூர் சென்ற மக்கள் மீண்டும் சென்னை திரும்பி வருவதால் சிங்கபெருமாள் கோவில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

வார விடுமுறை முன்னிட்டு சென்னையில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சென்றனர். கடந்த வெள்ளிக்கிழமை மாலை, கார், அரசுப் பேருந்துகள், தனியார் ஆம்னி பஸ்களில் பயணித்து சொந்த ஊர்களுக்கு சென்று சேர்ந்தனர். இந்நிலையில், வார விடுமுறை முடிந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று மதியம் முதலே சொந்த ஊர்களுக்குச் சென்ற பொதுமக்கள் மீண்டும் சென்னை நோக்கி புறப்பட்டு வரத்தொடங்கினர்.

ஒரேநேரத்தில் பொதுமக்கள் கார், பஸ், வாடகை வாகனங்களில் சென்னை நோக்கி வந்ததால் செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பைக், கார், அரசுப் பேருந்துகள், ஆம்னி பஸ்கள் என வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றதால் அவ்வழியே சென்ற வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்றன. சிங்கப்பெருமாள் கோவில் முதல் திருத்தேரி மகேந்திரா சிட்டி வரை ஏற்பட்ட வாகன நெரிசலை ஒழுங்குபடுத்தும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

The post வார விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்களால் சிங்கப்பெருமாள் கோவில் அருகே போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.

Related Stories: