தெலங்கானாவில் ரூ.23 கோடி தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல்

திருமலை: தெலங்கானா மாநிலம் சைபராபாத்தில் ₹23 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல் செய் தனர். தெலங்கானா மாநிலத்தில் தேர்தலையொட்டி பறக்கும்படை அதிகாரிகள் சைபராபாத் சிறப்பு தனிப்படை போலீசார் நேற்று வாகனத் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இரு வாகனங்களை சோதனையிட்டதில், உரிய ஆவணங்கள் இன்றி கடத்திச் வரப்பட்ட 34.78 கிலோ தங்க நகைகள் மற்றும் 43.60 கிலோ வெள்ளி நகையில் பிடிபட்டது. அவற்றை ஆர்.ஜி.ஐ. விமான நிலைய காவல் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.

மேலும் விசாரணையின் ஒரு பகுதியாக, கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் நாப்லாக் லாஜிஸ்டிக், மருதார் எக்ஸ்பிரஸ் மற்றும் மா பவானி லாஜிஸ்டிக் சர்வீஸ் நிறுவனத்தின் மூலம் மும்பையிலிருந்து ஐதராபாத் வரை ஜி.எம்.ஆர். உள்நாட்டு விமான முணையத்தில் ஏர் கார்கோ மூலம் கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது. இதனை யார் அனுப்பியது போன்ற விவரங்களை விசாரித்து வருகின்றனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

The post தெலங்கானாவில் ரூ.23 கோடி தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: