சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் 20ம் தேதிக்கு பிறகு வெளியாகும்?


சென்னை: சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வரும் 20ம் தேதிக்கு பிறகு வெளியிடப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. சிபிஎஸ்இ வாரியம் மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொதுத் தேர்வு நடந்தது. 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி மார்ச் 13 வரையிலும், 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 2ம் தேதி வரையிலும் நடந்து முடிந்தது.

மாணவர்கள் ஆர்வத்துடன் இந்த தேர்வை எழுதினர். தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், விடைத்தாள் திருத்தும் பணி முழு வீச்சில் நடந்தது. பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களும் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் தான், சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வரும் 20ம் தேதிக்கு பிறகு வெளியிடப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தேர்வு முடிவுகளை மாணவர்கள் Cbse.nic.in,cbse.gov.in அல்லது cbseresults.nic.in ஆகிய இணையதளங்கள் அறிந்து கொள்ளலாம். தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை பார்க்க முடியும். மாணவர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும் முதல் மதிப்பெண் பெற்றவர்களின் விவரங்களை சிபிஎஸ்இ வெளியிடாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் குறைந்தது 33 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும். சிபிஎஸ்இ இதுவரை தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. எனினும், இந்த மாதத்திலேயே வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* Cbse.nic.in, cbse.gov.incbseresults.nic.in, மேற்கண்ட இணையதளங்கள் மூலம் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்

The post சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் 20ம் தேதிக்கு பிறகு வெளியாகும்? appeared first on Dinakaran.

Related Stories: