கொதிக்கிற வெயிலில் ஸ்பெஷல் கிளாஸா? பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை

சென்னை: தமிழ்நாடு முழுவதும் பள்ளி முழு ஆண்டு தேர்வுகள் முடிந்து மாணவர்கள் கோடை விடுமுறையில் உள்ளனர். இவர்களில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவது பல பள்ளிகளில் வழக்கம். தமிழ்நாட்டை பொறுத்தவரை நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரிக்கிறது. மேலும் நேற்றைய தினம் கத்திரி வெயிலும் தொடங்கி விட்டது.

சுட்டெரிக்கும் வெயில் அனைத்து உயிரினங்களையும் வாட்டி வதைத்து வரும் நிலையில், அத்தியாவசிய தேவையின்றி பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் எனவும், வயதானவர்கள் மற்றும் குழந்தைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ளுமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். எனவே இந்த வெயிலினால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடது என்பதற்காக இதுபோன்ற கோடை விடுமுறை காலங்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக் கல்வித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: தமிழ்நாடு அரசு பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவித்த பின்னரும் பல்வேறு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. கடுமையான வெப்பம் நிலவும் இக்காலத்தில் கட்டாயமாக சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று தங்களது ஆளுகைக்குட்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மீறி சிறப்பு வகுப்புகள் எடுக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதில் அனைத்துக் கல்வி அலுவலர்களும் சிறப்புக் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

The post கொதிக்கிற வெயிலில் ஸ்பெஷல் கிளாஸா? பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: