பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவாக உள்ள பிரஜ்வலின் தந்தையும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனுமான ரேவண்ணா கைது

பெங்களுரு: பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவாக உள்ள பிரஜ்வலின் தந்தையும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனுமான ரேவண்ணா கைது செய்யப்பட்டுள்ளார். ரேவண்ணாவின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் கர்நாடக சிறப்பு புலனாய்வு குழு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மைசூருவில் காணாமல் போன பெண்ணை காலேனஹல்லி கிராமத்தில் ரேவண்ணாவின் உதவியாளருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் இருந்து சிறப்பு புலனாய்வு குழு மீட்டுள்ளனர். கடந்த 29ம் தேதியில் இருந்து தனது தாயை காணவில்லை என்று மைசூரை சேர்ந்த நபர் புகார் அளித்திருந்தார்புகாரில் முதல் குற்றவாளியாக ரேவண்ணா சேர்க்கப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட பெண்ணிடம் பெறப்போகும் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் காணாமல் போனாரா அல்லது கடத்தப்பட்டாரா என்பது தெரியவரும்.இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக தாயை காணவில்லை என மகன் புகார் அளித்திருந்த நிலையில், புகார் தொடர்பாக ரேவண்ணா முன்ஜாமின் கோரியிருந்தார். இந்நிலையில், ரேவண்ணாவின் முன்ஜாமின் மனுவை பெங்களூரு மக்கள் பிரதிநிதித்துவ நீதிமன்றம் நிராகரித்தது.ஏற்கனவே 2 நோட்டீஸ்களுக்கு பதிலளிக்காத நிலையில் ரேவண்ணாவுக்கு முன்ஜாமின் வழங்கக் கூடாது என்ற எஸ்ஐடி வாதத்தை ஏற்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மீண்டும் நோட்டஈஸ் வழங்க எஸ்ஐடி முடிவு செய்துள்ள நிலையில், அந்த நோட்டீஸ்க்கும் பதில் அளிக்கவில்லை என்றால் கைது நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், கடத்தல் வழக்கில் முன்ஜாமின் மனு நிராகரித்த நிலையில், ரேவண்ணா கைது செய்யப்பட்டுள்ளார். ரேவண்ணாவின் மகன் பிரஜ்வல் 300-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. பிரஜ்வல் தொடர்பான 3000 ஆபாச வீடியோக்கள் வெளியானதை அடுத்து சிறப்பு புலனாய்வு அமைத்து கர்நாடக போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

The post பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவாக உள்ள பிரஜ்வலின் தந்தையும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனுமான ரேவண்ணா கைது appeared first on Dinakaran.

Related Stories: