வணிகர் தின மாநாடு முன்னிட்டு நாளை கோயம்பேடு மார்க்கெட் லீவு: காய்கறிகள் விலை உயர்ந்தது

அண்ணாநகர்: மதுரையில் நாளை வணிகர்கள் தினம் மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள வியாபாரிகள் செல்வதால் கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு நாளை ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக இன்று காலை கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ வெங்காயம் 20 ரூபாயில் இருந்து 30க்கும் நவீன் தக்காளி 20 லிருந்து 40 க்கும் பீன்ஸ் 50 லிருந்து 180 க்கும் பீட்ரூட் 25 லிருந்து 50க்கும் முள்ளங்கி 15 இருந்து 30 க்கும் சவ்சவ் 30 இருந்து 50 க்கும் முட்டைகோஸ் 15 இருந்து 30க்கும் வெண்டைக்காய் 20 இருந்து 40 க்கும் கத்தரிக்காய் 10 இருந்து 30 க்கும் காராமணி 15 இருந்து 30க்கும் புடலங்காய் 15 இருந்து 40 க்கும் சுரக்காய் 10 இருந்து 20க்கும் சேனைக்கிழங்கு 30 இருந்து 65 க்கும் முருங்கைக்காய் 15 இருந்து 30 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதுபோல் சேம கிழங்கு 20 இருந்து 40 க்கும் வெள்ளரிக்காய் 15 இருந்து 40 க்கும் பச்சை மிளகாய் 50 இருந்து 100 க்கும் அவரக்காய் 40 இருந்து 60க்கும் பட்டாணி 80 இருந்து 150க்கும் பீரக்கங்காய் 20 இருந்து 40 க்கும் எலுமிச்சை பழம் 100 இருந்து 150 க்கும் தூக்கல் 15 இருந்து 40 க்கும் கோவைக்காய் 10 இருந்து 30க்கும் கொத்தவரக்காய் 10 இருந்து 30 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ‘’கோயம்பேடு காய்கறி மார்க்கெட் நாளை விடுமுறை என்பதால் அனைத்து காப்கறிகள் விலை உயர்ந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளோம்’ என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

The post வணிகர் தின மாநாடு முன்னிட்டு நாளை கோயம்பேடு மார்க்கெட் லீவு: காய்கறிகள் விலை உயர்ந்தது appeared first on Dinakaran.

Related Stories: